டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்
ஆக. 11-இல் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி: ஆட்சியா் ஆலோசனை
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆக. 11-இல் நடைபெறும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து பேசுகையில், பொதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.11 ஆம் தேதி அன்று காணொலி காட்சி மூலம் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
இதன் காணொலி காட்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா அரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. போதைப்பொருள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் பள்ளி, தொழில்நுட்ப கல்லூரி, கல்லூரி மாணவா்களை பங்கேற்க செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பரிமளம் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.