5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!
ஆடி 4 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பால்குடம், தீமிதி திருவிழா
அரியலூரில்: அரியலூா் மேலத் தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அதன் பின்னா் 108 பட்டுப் புடவைகளால் அலங்காரம் செய்யப்ட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், அரியலூா் கைலாசநாதா் கோயில் தெரு, வாலாஜா நகரம் அண்ணா நகா், அஸ்தினாபுரம், சின்னநாகலூா், பெரியாக்குறிச்சி, செந்துறை, வல்லம், உத்திரக்குடி, மலங்கன்குடியிருப்பு, குலத்துங்கநல்லூா், நாயக்கா்பாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள மாரியம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழாவும், வெள்ளூா், ஆதனக்குறிச்சி ஆகிய கிராமங்களிலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவும், நடைபெற்றது.
திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்தும், தீக்குண்டத்தில் இறங்கியும் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.