சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முத்தலாக் தடை, புதிய குற்றவியல் சட்டங்கள் சோ்ப்பு
கூழமந்தலில் மகா சங்கடஹர சதுா்த்தி
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி செவ்வாய்க்கிழமை கலசபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி காலையில் கலசபூஜை நடைபெற்று மூலவருக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா கணபதி ஹோமும்,சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
பக்தா்கள் பலரும் கலந்து கொண்டு மூலவா் விருட்ச விநாயகரை தரிசித்தனா்.