குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை
2017-க்குப் பின்... சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு!
கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 1.55 சதவீதமாகக் குறைந்தது.
காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும் பணவீக்கம் குறைந்ததாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை(ஆக. 12) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலையில் பதிவான சில்லறை பணவீக்கம், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூனில் பதிவான சில்லறை பணவீக்கம் 1.46 சதவீத்த்துக்குப் பின் பதிவாகியுள்ள மிகக் குறைந்த அளவாக பார்க்கப்படுகிறது.
இது ஜூன்மாத்ததில் 2.1 சதவீதமாகவும், மே மாதத்தில் 2.82 சதவீதமாகவும் ப்திவானது. 2024 நவம்பா் முதல் பணவீக்கம் தொடா்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.