செய்திகள் :

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

post image

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஆகஸ்ட் 13 ல்(நாளை) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் சற்று வலுவடையக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

ஆகஸ்ட் 12ல் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 13ல் திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 14 முதல் 18 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (12-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்;

12-08-2025 முதல் 14-08-2025 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பேருக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்கள்: அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்!

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

செப்.8ல் பிரதமர் மோடி அஸ்ஸாம் வருகை: ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர்!

பிரதமர் நரேந்திர மோடி மாநில வருகைக்கான ஏற்பாடுகளை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஆய்வு மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், செப்டம... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு: துணைக் கலந்தாய்வுக்கு ஆக. 14 வரை விண்ணப்பிக்கலாம்!

இளநிலை பொறியியல் (B.E / B.Tech) படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த சிறுமி படுகாயம்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சிறுமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் படுகாயமடைந்தார்.ஆள்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க