செய்திகள் :

China Robot Mall: வாலாட்டும் நாய் முதல் பரிமாறும் சர்வர் வரை; எல்லாம் ரோபோ மயம்!

post image

டந்த சில தினங்களுக்கு முன்னால் சீன தலைநகர் பெய்ஜிங்கில், உலகின் முதல் ரோபோக்கள் விற்பனையகமான '4 S' என்கிற ரோபோ மால் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மாலில் மனித உருவ ரோபோக்கள் உள்பட, தேநீர் தயாரிக்கிற, உணவு வழங்குகிற என நுகர்வோரின் தேவையறிந்து அவர்களுக்கு உதவி செய்கிற வகையில் பல ரோபோக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

China Robot Mall
நடனமாடும் ரோபோக்கள்

இந்த நான்கு மாடி ரோபோ மால், 4,000 சதுர மீட்டருக்கு மேல், ஏழு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தயாரித்த வீட்டு உதவியாளர் ரோபோக்கள், செல்லப்பிராணிகள், இயந்திரங்கள் இந்த ரோபோ மாலில் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி குறைதல் மற்றும் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற சவால்களை சமாளிக்க சீனா ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிக முதலீடு செய்துள்ளது. தவிர, சீன அரசாங்கம் AI மற்றும் ரோபாட்டிக்ஸ் ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு டிரில்லியன் யுவான் நிதியை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த ரோபோ மாலுக்கு செல்பவர்கள், ரோபோட்டிக் தீம் ரெஸ்ட்டாரண்டில், சில ரோபோக்கள் சமைக்க, சில ரோபோக்கள் பரிமாற, சாப்பிட்டப்படியே ரோபோக்களின் ராக் இசைக்கச்சேரியை கேட்கலாம். குழுவாக நடனமாடும் ரோபோக்களை கண்டு ரசிக்கலாம். சிறிய ரக ரோபோ நாயுடனும், செஸ் விளையாடும் ரோபோக்களுடனும் விளையாடலாம். பார் அட்டெண்ட்டர்கூட ரோபோ தான்.

பார் அட்டெண்ட்டர்கூட ரோபோ தான்.
பார் அட்டெண்ட்டர்கூட ரோபோ தான்.

'ஆயிரக்கணக்கான வீடுகளில் ரோபோக்கள் நுழைய வேண்டுமென்றால், ரோபோட்டிக்ஸ் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்பது போதாது' என்கிறார் இந்தக் கடையின் நிர்வாக இயக்குனர் வாங் யிஃபான். இங்கு தற்போது விற்பனையில் உள்ள ரோபோக்களின் விலை இந்திய பணத்தில் 24,000 முதல் சில கோடிகள் வரை இருக்குமாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்னணி என்ன?

பெங்களூரு நகரின் போக்குவரத்துப் பிரச்னைகளை எடுத்துரைக்கும் ஐந்து வயது சிறுமியின் கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கடிதம், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் ’மெட்ரோவின் மஞ்சள் பாதை’... மேலும் பார்க்க

Bumpiest flight routes: விமானத்தில் திடீரென ஏற்படும் குலுக்கல்களால் திணறும் விமானிகள்- பின்னணி என்ன?

கடந்த வாரம், அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு சென்ற டெல்டா விமானம் கடுமையாக குலுங்கியதால், பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகிவிடும் என அச்சமடைந்துள்ளனர்.மோசமான வானிலை மாறுப... மேலும் பார்க்க

பணமோசடி வழக்கில் சிக்கிய மகனை பாதுகாக்க சட்டம் பயிலும் 90 வயதான தாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஹீ என்ற 90 வயதான தாய் தனது 57 வயதான மகன் லின்னை பாதுகா... மேலும் பார்க்க

Raksha Bandhan: 1500 மாணவிகளின் ராக்கி கயிறுகளால் திகைத்த ஆசிரியர்; வைரல் வாத்தியார் Khan sir யார்?

பீகார் மாநிலம் பாட்னாவில் இயங்கி வருகிறது Khan GS Research Centre. இந்த நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் கஃபைசல் கான், மாணவர்களால் 'கான் சார்' என அழைக்கப்படுகிறார். SSC, Railway, UPSC போன்ற அரசு வேலை ... மேலும் பார்க்க

”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான்

சர்வதேச கிரிக்கெட் வீரர் ரஜத் பட்டிதாரின் தொலைபேசி எண் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு சென்றதையடுத்து பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ள சுவாரஸ்ய சம்பவம் சத்த... மேலும் பார்க்க