திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!
கூலி அலெலே போலேமா-க்கு என்ன அர்த்தம்?
கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிக்கு அனிருத் அர்த்தம் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளது.
தமிழகத்தைத் தாண்டி கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் பகுதிகளிலும் முதல் நாளுக்கான டிக்கெட்கள் அபாரமாக விற்றுத் தீர்ந்துள்ளன
இதனால், கூலியின் முதல் நாள் வசூல் ரூ. 150 கோடிக்கும் அதிகமாகத்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட அனிருத்திடம் கூலி டீசரில் இடம்பெற்ற, ‘அலெலே போலேமா (AlelaPolema)’ பாடல் வரிக்கு என்ன அர்த்தம்? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு அனிருத், “அலெலே போலேமா என்றால் கிரேக்க மொழியில் சண்டைக்குத் தயார் என இணையத்தில் படித்தேன். அதனையே, டீசரில் பொருத்தி பாடல் வரியாக மாற்றினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இதெல்லாம் தேவையா தலைவரே? விமர்சனத்திற்கு ஆளாகும் ரஜினி!