மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
``கல்லூரிக்கு வரும்போதுதான் அதிக சிரமப்படுகிறோம்'' -மாற்றுத்திறனாளி மாணவர்கள்; பிரச்னைக்கு காரணம்?
மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி, தேர்வு
கல்லூரிக்கு படிக்க சென்று வருவதில் இருந்து, ஹாஸ்டல் ஃபுட் ஃபெசிலிட்டீஸ் என்று நமக்கு சாதாரணமாக கிடைக்கும் விஷயங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வளவு சிரமப்பட்டு கிடைக்கின்றது என்பதை அவர்களது உலகத்திலிருந்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதை புரிய வைக்கும் விதத்தில் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் நம்மிடம் பேசினார்கள்.
அவர்கள்பேசும் பொழுது, "இந்த சமுதாயத்தில் உதவி செய்ய மாட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், உதவி செய்ய நினைக்கின்றவர்களையும் உதவி தேவைப்படுகின்றவர்களையும் இணைக்கத்தான் இங்கு ஆள் இல்லை.
எங்களைப் போன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்டடி மெட்டீரியலில் இருந்து தேர்வு வரை எல்லாமே சேலன்சிங்கா தான் இருக்கு. பள்ளி அளவில் எங்களுக்கு அவ்வளவாக கஷ்டமில்லை. ஏனென்றால், எங்களுககென்றே கென்றே தனியாக பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால், நாங்கள் கல்லூரிக்கு வரும்போதுதான் அதிகம் சிரமப்படுகிறோம். தேர்வு எழுதும் பொழுது எங்களுக்கு உதவியாளர்கள் (Scribe) தேவைப்படுகிறார்கள்.
அவர்களை கண்டுபிடிப்பதே மிகவும் சிரமமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் கடைசி நேரம் வரை இருந்துவிட்டு வர முடியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இல்லையென்றால், தாமதமாக வருபவர்களும் இருக்கின்றார்கள். அதனால், தேர்வு ஒருங்கிணைப்பாளர்களே (Exam Conducting Bodies) எங்களுக்கு scribe ஏற்பாடு செய்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

உதவியாளர்களையும் உதவி தேவைப்படுகின்றவர்களையும் இணைப்பதற்கு ஏதாவது ஒரு ஆர்கனைசேஷன், கமிட்டி, சோசியல் சர்வீஸ் டீம், இல்லை என்றால் NSS மாணவர்களையாவது இதற்கென்று அனுப்பலாம்.
இன்டர்னல் எக்ஸாம் என்றால் அட்ஜஸ்ட் பண்ணலாம். எக்ஸ்டர்னல் எக்ஸாம்க்கு நாங்கள் என்ன செய்வது? அனைத்து அரசுக் கல்லூரியிலும் எங்களுக்கு என்று ஹாஸ்டல் மற்றும் ஃபுட் ஃபெசிலிட்டிஸ் வேண்டும். கல்லூரிக்கு அடுத்த தெருவில் ஹாஸ்டல் இருந்தாலும் கூட அது மற்றவர்களுக்கு பக்கமாக இருக்கலாம். ஆனால், மழை பெய்தாலோ குழி தோண்டி போட்டு கிடந்தாலோ நாங்கள் எப்படி வர முடியும் என்று கேட்டால் ஒரு கல்லூரிக்கு இரண்டு சதவீதம் தான் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்காக இதை கொண்டு வர முடியுமா என்று கேட்கிறார்கள்.
கல்லூரி வாழ்க்கை
ஃபெசிலிட்டிஸ் நல்ல இருந்தா எங்களுடைய என்ரோல்மென்ட் பர்சன்டேஜ் இன்கிரிஸ் ஆகப்போகுது. அதுமட்டுமல்லாமல், எல்லோரும் ஒரு புக்கை 500 ரூபாய்க்கு வாங்கினால் பார்வையற்ற மாணவர்களுக்கு அந்த புக் 1000 ரூபாய் ஆகின்றது. எப்படி என்றால், பிரிண்டெட் புக்கை வாங்கி எங்களுக்கு படிப்பதற்கு ஏதுவாக மாற்றுவதற்கு இவ்வளவு செலவாகின்றது. நாங்கள் படிக்கிற புக்ஸ் பெரும்பாலும் ஆடியோ புக் ஃபார்மெட்டில் இல்லை. சொல்லப்போனால் அரசுக்கு இப்படி ஒரு சமூகம் இருக்கின்றது என்பதே தெரியவில்லை.
இன்னும் எங்களுக்கு ஏற்றவாறு டெக்னாலஜி அட்வான்ஸ்மெண்ட்ஸ் நிறைய வரவேண்டும். எங்களுக்கு சப்போர்ட்டிவ்வான பிரெண்ட்ஸ் சர்க்கிள் எங்களுக்கு இருக்கு. இருந்தாலும், பப்ளிக்கில் வரும்பொழுது நாங்கள் சில தர்ம சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கின்றது என்று கூறினார்கள்.

இது குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நூலகரிடம் கேட்டபொழுது, “அரசு கல்லூரிகள் என்று எடுத்துக்கொண்டால் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் என்று இரண்டு விதமாக நாம் பிரிக்கலாம். இதில் தனியார் கல்லூரிகளும் சரி அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சரி ஓரளவிற்கு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு என சலுகைகளை செய்து கொண்டு தான் வருகிறார்கள்.
ஆனால், அரசு கல்லூரி என்று வரும் பொழுது, அவர்களுக்கு தேவையான ஃபண்டை கவர்மெண்ட் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவர்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என இருக்கக் கூடிய தேர்வு உதவியாளர்கள் அரேஞ்ச்மென்டை இன்னும் அவர்கள் சின்சியராக எடுத்துச் செய்ய அரசாணை வெளியிடப்பட வேண்டும். உதவியாளர்களாக வருபவர்களுக்கு போதுமான ஊழியமும் சான்றிதழும் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
`அரசு கல்லூரிகள் என்று வரும்போது'
இதற்காக NSS மாணவர்களையும் தயார்படுத்தலாம். அரசு கல்லூரிகளை நம்மால் குற்றம் சொல்ல முடியாது. அரசு கல்லூரிகளுக்கு அரசு ஃபண்டு ஒதுக்கினால் தான் அவர்களும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
ஸ்க்ரைப் டிஃப்பிகல்டி மட்டுமல்ல தனியார் கல்லூரியில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ராம்ப், வீல் சேர், பிரேலி புக்ஸ், ஆடியோ புக்ஸ், லிஃப்ட், ஹாஸ்டல் மற்றும் ஃபுட் ஃபெசிலிட்டீஸ் போன்ற பல வசதிகளையும் அரசு கல்லூரிகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செய்ய வேண்டுமென்றால் அதற்கு போதுமான ஃபண்ட் வேண்டும்.
சமச்சீர் கல்வி புத்தகங்களில் க்யூ ஆர் கோடு லிங்க் இருப்பது போன்று மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் புத்தகங்களிலும் லிங்க் இருந்தால் அவர்கள் அதை ஸ்கேன் செய்தவுடன் அது ஆடியோ ஃபார்மெட்டில் மாறும் விதத்தில் டெக்னாலஜி கொண்டு வரலாம்.

தனியார் கல்லூரிகள் என்று வரும்பொழுது அவர்கள் எந்த விதமான சிக்கல்களை எதிர்கொண்டாலும் டைரக்டாக மேனேஜ்மென்டிடம் சென்று பேசிவிடலாம். அதனால் அவர்களுக்கான சலுகைகள் வழங்கப்படுகின்றது.
ஆனால் அரசு கல்லூரிகள் என்று வரும் பொழுது 50% மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்பது தான் உண்மை. ஏனென்றால், அவர்கள் மேனேஜ்மென்டிடம் சென்று பேசினால் கூட கவர்மெண்ட் தான் அதற்கு ஃபண்ட் ஒதுக்க வேண்டும். அரசு கல்லூரிகள் மட்டுமல்ல. எந்த கவர்மெண்ட் செக்டாராக இருந்தாலும் ஃபண்ட் அண்ட் மெயின்டனன்ஸ் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விரக்தியுடன் தான் வேலை பார்ப்பார்கள்" என்று கூறினார்.