மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று(ஆக. 12) அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
