இணையத்தில் வைரலாகும் ”ரசம் சாதம் பாப்சிகல்" - உணவுப் பிரியர்களின் ரியாக்ஷன் என்ன?
நம்மில் பெரும்பாலானோர், துரித உணவுகளுக்குப் பழகிவிட்டோம், இன்னும் சிலர் உணவுகளை விட ஸ்நாக்ஸை அதிகம் சாப்பிடுகிறார்கள்.
பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி, பீட்சா, சாண்விட்ச் என மக்கள் விரும்பி உண்ணும் ஸ்நாக்ஸ்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
போட்டி நிறைந்த உணவுத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான முறையில் கொடுக்க வேண்டும் என்று அதனை விற்பனை செய்பவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் குலாப் ஜாமுன் பீட்சா, மாஸா மேகி, ஹார்ட் வடிவ சாண்ட்விச், இட்லி சாம்பார் ஐஸ்கிரீம் என மக்களுக்கு வித்தியாசமான உணவுகளைக் கொடுத்துத் தள்ளிவிட்டனர்.
இந்த நிலையில் ”ரசம் சாதம் பாப்சிகல்" என்று இணையத்தில் புதிதாக ட்ரெண்டாகி வருகிறது. மாம்பழம், ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு என பலவகையான சுவைகளில் கிடைக்கும் பாப்சிகலை மக்கள் ருசித்திருப்பார்கள். இப்போது வித்தியாசமாக ”ரசம் சாதம் பாப்சிகல்" என்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான ரசம் சாதம், அதன் காரமும், புளிப்பு சுவையும் கொண்டு அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு வீட்டு உணவாகும். இது வழக்கமாக சூடாக, சாதத்துடன் பரிமாறப்படும். ஆனால், இந்த பாரம்பரிய உணவை குளிர்ச்சியான பாப்சிகலாக மாற்றியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ, இந்த "ரசம் சாதம் பாப்சிகல்" விளம்பரத்தை காட்டியது. விளம்பரப் பதாகையில், பாரம்பரிய ரசத்தை ஒத்த ஆரஞ்சு நிறத்தில் ஒரு பாப்சிகல் படம் இடம்பெற்றிருந்தது. விளம்பரத்தில் ஒரு QR குறியீடு இருந்தது.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி 3,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. ரசம் சாதம் பாப்சிகல் ஒரு உணவுப் பரிசோதனையா அல்லது வெறும் கவன ஈர்ப்பு விளம்பரமா? என்று உணவு பிரியர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.