கர்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ் விநியோகம்; அரசு மருத்துவமனை முற்றுகை - திருப்பூ...
கோவை: 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் விவகாரம் - பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது 278 கிலோ எடையிலான பேரிச்சம் பழம் கெட்டுப்போன நிலையில் கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பேரிச்சம் பழங்களை பினாயில் ஊற்றி அழித்தனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் அதிகம் பயன்படுத்தும் ஒரு நிறுவனத்தில் நடைபெற்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கமளித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “பிளிப்கார்ட் நிறுவன கிடங்குகளில் உணவுப் பொருள்கள் மிகுந்த பாதுகாப்பு மற்றும் உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகின்றன.
எங்களின் அனைத்து மையங்களில் நடைபெறும் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கிறோம். பொதுவாக காலாவதியான உணவுப் பொருள்களை தரச் சோதனை செய்து அடையாளம் காண்பதற்காக தனியாக பிரித்து வைப்போம்.

இந்த பேரிச்சம் பழமும் அப்படி வைக்கப்பட்டது தான். அந்த பேரிச்சை விற்பனைக்காக வைக்கப்படவில்லை. எங்களுக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மட்டுமே முதன்மையானது.” என்று கூறியுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.