``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது எ...
மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு
சென்னை: கோடம்பாக்கத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த உத்தர பிரதேச இளைஞா் உயிரிழந்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், காசிப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பா.சக்திமான் (23). இவா், சகோதரா் அனில்குமாா் (33). இவா்கள், சென்னை கோடம்பாக்கம் காப்பரேஷன் காலனி பகுதியில் புதிதாக கட்டப்படும் ஒரு கட்டடத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தாா்.
இதற்காக இருவரும் அங்கேயே தங்கியிருந்தனா்.
இந்நிலையில் சக்திமான், ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்றாவது மாடியில் உள்ள தண்ணீா் தொட்டியின் மீது ஏறி படுத்து தூங்கினாா். தூக்க கலக்கத்தில் அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் வளாகச் சுவா் மீது விழுந்து பலத்த காயமடைந்த சக்திமான், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கோடம்பாக்கம் போலீஸாா், சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.