மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்பு! எண்ணிக்கை 44 ஆக உயர்வு!
தில்லி உயர் நீதிமன்றத்தில், புதியதாக மேலும் ஒரு நீதிபதி நியமனம் செய்யப்பட்டு, பதவியேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக, விமல் குமார் யாதவ், இன்று (ஆக.12) பதவியேற்றுள்ளார். இதன்மூலம், அந்த உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தில்லி மாவட்டத்தின் ஓய்வு பெற்ற நீதித் துறை அதிகாரியான நீதிபதி விமல் குமார் யாதவ், பதவி உயர்வு செய்யப்பட்டு, தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஹிந்தி மொழியில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி விமல் குமார் யாத்விற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் வரை பதவி வகிக்க அனுமதியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் அங்கு 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்