பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும்: தூய்மைப் பணியாளர்கள்
எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து வெளியேறினார் கனிகா - பின்னணியில் நடந்தது என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் இருந்து கனிகா வெளியேறி இருக்கிறார். வெளியேற்றத்துக்கான காரணம் குறித்து பலவிதமான தகவல்கள் உலாவுகின்றன.
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். முதல் சீசன் ஹிட் ஆனதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் போய்க் கொண்டிருக்கிறது.
முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைய சில மாதங்கள் தடுமாறியது யூனிட்.

தொடர்ந்து ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டருக்கு நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி வந்தார். இவரது மனைவியாக நடித்து வந்தார் நடிகை கனிகா.
தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாகப்போய்க் கொண்டிருக்கும் சூழலில் கனிகா சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக கடந்த சில நாட்களாக அரசல் புரசலாக செய்திகள் கசிந்து வந்தன.
எனவே இது தொடர்பாக தகவலை உறுதி செய்ய சீரியல் தொடர்புடைய வட்டாரத்தில் நாம் விசாரித்த போது கனிகா வெளியேறி விட்டது உண்மைதான் என உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கல் தெரிவிக்கின்றன.
தொடர் நல்ல ரேட்டிங்கில் போய்க் கொண்டிருக்கும் சூழலில் க்னிகா வெளியேறியதற்கான காரணம் குறித்தும் நாம் விசாரித்தோம்.
‘பர்சனல் காரணங்கள்’னு சொல்றாங்க. அவரே வெளியேற விரும்பறதாகவும் அதனால வேற ஆர்ட்டிஸ்ட் பார்த்துக்கோங்க சொன்னதாகவும் தெரியுது. அதனாலேயே அவர் ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகற மாதிரி சீனெல்லாம் வச்சாங்கன்னும் பேசறாங்க.. அவருக்குப் பதில் வேற ஆர்ட்டிஸ்ட் வருவாங்களா அல்லது கேரக்டரை முடிச்சிடுவாங்களாங்கிறது தெரியலை’ என்கிறார்கள் சிலர்.

வேறு சிலரோ, ‘சினிமாவுல கதாநாயகியா நடிச்சவங்க அவங்க. ரொம்ப வருஷம் கழிச்சு டிவிக்கு வந்தாங்க. சீரியல்ல தன்னுடைய கேரக்டருக்கு ரொம்பவெ முக்கியத்துவம் இருக்கும்னு நினைச்சு வந்தாங்க. ஆனா முதல் சீசன்லயே குணசேகரன் கேரக்டருக்கு கிடைச்ச முக்கியத்துவம் தன்னுடைய கேரக்டருக்கு கிடைக்கலைங்கிற வருத்தம் அவங்களுக்கு இருந்திச்சு. இப்படி இருக்க இந்த சீசன்லயும் சமீபமா வேறு சில கேரக்டர்களுக்குக் கிடைச்ச முக்கியத்துவம் தனக்குக் கிடைக்கலைனு நினைச்சிருக்காங்க. அதனாலேயெ இப்படியொரு முடிவை எடுத்திருக்காங்க’ என்கிறார்கள்.
கனிகா நடித்த ஈஸ்வரி கேரக்டருக்கு வேறு யாரும் வருவார்களா அல்லது அந்தக் கதாபாத்திரம் முடித்து வைக்கப்படுமா என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்து விடும்.