செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!

post image

நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, மேலும் அவரது வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. விசாரணையில் நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உறுதியானது. தொடர்ந்து நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை இந்த தீர்மான முன்மொழிவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறினார்.

Lok Sabha Speaker Om Birla forms 3-member panel to probe Justice Yashwant varma

இதையும் படிக்க |வாயில்லா ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னை அல்ல! ராகுல்

மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் ராகுலுக்கு ஆதரவு!

வாக்குத் திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும்... மேலும் பார்க்க

டிரம்ப் வரியால் சூரத்தில் வைர ஏற்றுமதி சரிவு!

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி விதிப்பினால், குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி ம... மேலும் பார்க்க

6 மாதங்களில் 19,600 பாலியல் குற்றங்கள்! ராஜஸ்தானை உலுக்கும் ‘திடுக்’ தரவுகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 19,000 பெண்கள் பாலியல் ரீதியிலான வன்கொடுமை குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.பெண்க... மேலும் பார்க்க

மணிப்பூரில் 22 கிளர்ச்சியாளர்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம், 22 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் பிஷ்னூப்பூர், சூராசந்திரப்பூர், சந்தேல், தௌபல், கி... மேலும் பார்க்க

அசாமில் புதியதாக 10 துணை மாவட்டங்கள்!

அசாம் மாநிலத்தில் புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக, அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், புதியதாக 10 துணை மாவட்டங்கள் உருவக... மேலும் பார்க்க