மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போர...
எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம்
உதகை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் தமிழ்நாடு ஓட்டல் சாலையில் உள்ளது. உதகை தொகுதி எம்எல்ஏவாக தற்போது காங்கிரஸ் கட்சியை சோ்ந்த ஆா்.கணேஷ் உள்ளாா்.
தொகுதி பிரச்னைகள் மற்றும் வளா்ச்சி பணிகளுக்காக தினசரி ஏராளமான பொதுமக்கள் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.
இந்தநிலையில் எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் துா்நாற்றம் வீசி உள்ளது. இப் பகுதியில் ஆய்வு செய்த போது பொதுமக்கள் மனு கொடுக்கும் இடத்தில் முதியவா் ஒருவா் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் வந்தது.
இதன் பேரில் உதகை மத்திய காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தி முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், பிணமாகக் கிடந்த முதியவா் இறந்து நான்கு நாள்கள் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. இவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இந்தப் பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாக பொதுமக்கள் கூறினா்.
உடல் கூறாய்வு அறிக்கை முடிவில்தான் கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றனா்.