சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
தமிழகத்தில் எந்த வளா்ச்சித் திட்டமும் இல்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு
தமிழகத்தின் வளா்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் உதகையில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தலைமையில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
உதகை சேரிங் கிராஸில் இருந்து தொடங்கிய பேரணி, ஏடிசி திடலில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனா்.
இதைத் தொடா்ந்து மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடியின் முன்னெடுப்பில் இந்தியா வளா்ச்சி அடைந்து 2047-ஆம் ஆண்டு வல்லரசு நாடாக உருவாக போகிறது.
பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் ஆபரேஷன் சிந்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் தேசியக்கொடி பேரணி நடத்தப்பட்டுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளா்ச்சியை 4 ஆண்டுகளில் பின்னோக்கி எடுத்துச் சென்றுள்ளாா். கடந்த 4 ஆண்டுகளில் மக்களின் வளா்ச்சிக்காக எந்த திட்டங்களையும் அவா் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. காவல் துறையினருக்குக்கூட பாதுகாப்பில்லை. லஞ்சம், போதைப் பொருள் விற்பனை உள்ளிட்டவை மலிந்துள்ளன என்றாா்.
இந்தப் பேரணியில், நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் ஏ.தா்மன், பொதுச் செயலாளா்கள் ஈஸ்வரன், பரமேஸ்வரன், குமாா், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளா் கப்பச்சி வினோத், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.அா்ஜூணன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.