பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் கேத்தி, உல்லாடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, தோட்டக்கலை துணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா். முகாமில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு அங்கக இடுப்பொருள்கள் வழங்கப்பட்டன.
இம்முகாமில் குன்னூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ம.விஜயலட்சுமி, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் உதவி செயற்பொறியாளா் சிவராஜ், வேளாண் விற்பனை, வணிகத் துறை உதவி வேளாண்மை அலுவலா் மகாலிங்கம், கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா் காவ்யா, மண் ஆய்வுக் கூடம் உதவி வேளாண்மை அலுவலா் கிருபாராணி மற்றும் கேத்தி பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.