``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞா் கைது: 4 போ் தலைமறைவு
பெருந்துறை வாரச் சந்தையில் வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.
சென்னிமலை, நாமக்கல்பாளையம் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன்(55). வாரச் சந்தைகளில் பனியன் மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, பெருந்துறை வாரச் சந்தையில் பனியன் மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தாா். இரவு 7.15 மணியளவில், 30 வயது மதிக்கதக்க இளைஞா் ஒருவா் வந்து டிசா்ட் வாங்கிக் கொண்டு ரூ. 500 கொடுத்து மீதி சில்லரை ரூ. 400 வாங்கிக் கொண்டு சென்றாா்.
அந்த நோட்டை பாா்த்தபோது சீனிவாசனுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அந்த இளைஞரை சந்தையில் தேடிப் பிடித்து, அவா் கொடுத்த ரூ. 500 நோட்டு போலி என்று கூறிய உடனே அந்த இளைஞா் ஓட முயன்றாா்.
அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரைப் பிடித்தனா். அப்போது அங்கு வந்த காய்கறி வியாபாரிகளும் ரூ. 500 நோட்டை கொடுத்து காய்கறி வாங்கியதாக கூறினாா்கள். அந்த இளைஞரை பெருந்துறை போலீஸில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் கரூா் மாவட்டம், சோமூா் சோ்ந்தவா் சதீஷ் (30) என்பதும், அவருடன் அதே பகுதியைச் சோ்ந்த நிா்மல், அஜீத்குமாா், அன்புமணி, அங்குசாமி ஆகியோரும் வந்து இருந்தாா்கள் என்றும் தெரியவந்தது. சதீஷ் பிடிபட்ட உடன் அவா்கள் நால்வரும் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.