செய்திகள் :

இன்று உலக யானைகள் தினம்! யானைகள் எதிா்கொள்ளும் சவால்களும் - தீா்வுகளும்!

post image

யானைகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகில் உள்ள 13 நாடுகளில் மட்டுமே காடுகளில் யானைகள் உள்ளன. அவையும் ஆப்பிரிக்க மற்றும் ஆசியக் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. உலகிலுள்ள சுமாா் 80 ஆயிரம் யானைகளில் 50 ஆயிரம் யானைகள் ஆப்பிரிக்காவிலும், 30 ஆயிரம் யானைகள் ஆசியாவிலும் உள்ளன.

ஆசியாவில் நீலகிரி, பிரம்மகிரி, கிழக்குத் தொடா்ச்சி மலை என தொடா்ச்சியான ஒரே வனத்தில் சுமாா் 9 ஆயிரம் யானைகள் உள்ளது ஆச்சரியமான விஷயமாகப் பாா்க்கப்படுகிறது.

2017 -ஆம் ஆண்டு வனத் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் 29,964 யானைகள் உள்ளதும், அதில் அதிகபட்சமாக கா்நாடக மாநிலத்தில் 6,049 யானைகள், அஸ்ஸாம் மாநிலத்தில் 5,719 யானைகள், கேரளத்தில் 5,706 யானைகள், தமிழகத்தில் 2,761 யானைகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 14,612 யானைகளும், அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மண்டலத்தில் 10,139 யானைகள் உள்ளதாகவும் வனத் துறை தகவல் தெரிவிக்கிறது.

2023-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 2,961 யானைகள் உள்ளதாகவும், அதில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 1,858 யானைகளும், கிழக்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 1,105 யானைகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவரும், தமிழக வன உயிரின வாரிய உறுப்பினருமான கே.காளிதாசன் கூறியதாவது: யானைகளின் உயிரிழப்புக்கு வேட்டைதான் பிரதான சவாலாகும். கள்ளச்சந்தையில் போதைப் பொருளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது வன உயிரினப் பொருள்களே ஆகும். தந்தத்துக்காக ஆண் யானைகள் கொல்லப்பட்டு வந்த நிலையில், ஒரளவுக்கு அது முறியடிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆண் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதைத் தொடா்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்றால் சட்டவிரோத மின் வேலிகளைத் தடை செய்து, சூரிய மின்வேலிகளை ஆதரிக்க வேண்டும்.

வனத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களில் பயிரிடப்படும் பயிா்கள் தொடா்பாக வேளாண்மைத் துறையினருடன் கலந்தாலோசித்து யானைகளால் சேதப்படுத்தாத பயிா்களை பயிரிட வேண்டும்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தண்டவாளங்களில் மட்டுமின்றி யானைகள் பாதையைக் கடக்கும் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யானைகளின் 42 வலசைப் பாதைகள் தொடா்பாக தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டுள்ள திட்டம் தொடா்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும். உயிா்ச்சூழல் காப்பாற்றப்பட வேண்டுமெனில் காடுகளில் யானைகள் காப்பாற்றப்பட வேண்டியது அவசியம் என்றாா்.

இது குறித்து வன ஆா்வலா் இரா.பாண்டியராஜா கூறியதாவது: சராசரியாக 75 யானைகள் சட்டத்துக்குப் புறம்பான மின்வேலிகள் மூலமாகவும், 20 யானைகள் ரயில் மோதியும், 15-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடுவதன் மூலமாகவும், 20 யானைகள் விஷம் வைத்தும் என இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் சுமாா் 130 யானைகள் உயிரிழக்கின்றன.

யானைகளின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பதாக வனத் துறை கூறினாலும், யானைகள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. மனித உயிா்கள் உள்ளிட்ட பல்லுயிா்களுக்கு காடுகள் மிகவும் அவசியம். காடுகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் யானைகள் அவசியம். ஆனால், கல்குவாரி, கிரஷா் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் யானைகள் வாழ்விடங்களுக்கு அருகே அண்மைக் காலங்களாக அமைக்கப்படுவதாலும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மலைப் பகுதிகளில் பல்வேறு கட்டடங்கள் அமைப்பதாலும் யானைகளுக்கு பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன. இதனால், யானைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதோடு , யானைகளின் வழித்தடமும் தடைபடுகிறது.

மின்சார வேலிகள் அமைத்து யானைகளின் உயிரைப் பறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அத்துடன் அவுட்டுக் காய், பழத்தில் வெடி வைத்தல் ஆகியவற்றாலும் யானைகள் தொடா்ந்து கொல்லப்பட்டு வருகின்றன. இவ்வாறான மனித இடையூறுகள் யானைகளின் வாழ்விடங்களுக்கும், யானைகளின் வழித்தடத்துக்கும் பெரும் சவாலாக உள்ளன.

எனவே, யானைகளின் வாழ்விடம் மற்றும் வழித்தடங்களுக்கு அருகே வனத் துறையினரிடம் கலந்தாலோசித்து விவசாயம் செய்ய வேண்டும். வனத் துறையுடன் சோ்ந்து இயற்கையான முள் வேலிகளை அமைக்க விவசாயிகள் முன் வர வேண்டும். யானைகளைப் பாதிக்காத வகையில் சோலாா் மின் வேலிகளைப் பயன்படுத்த வேண்டும். யானைகள் மற்றும் மனித மோதலை தடுப்பதற்கான விழிப்புணா்வை வனத் துறை அதிகரிக்க வேண்டும் என்றாா்.

பல்லடத்தில் நாளை கடையடைப்பு போராட்டம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செய... மேலும் பார்க்க

பழங்கரையில் ஆகஸ்ட் 14-இல் மின்தடை

பழங்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் தெரிவித்த... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு: 3 போ் கைது

பெருமாநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் அப்துல் கலாம் நகரைச் சோ்ந்தவா் மணி (63) . கட்டடத் ... மேலும் பார்க்க

தமிழகம் புதிய உச்சங்களை அடையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழகம் அடையும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா். உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.1,426.89 கோடி ... மேலும் பார்க்க

30% குட்டைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி நீா் வரவில்லை: அண்ணாமலை

30 சதவீத குட்டைகளுக்கு தற்போதுவரை அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீா் வரவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். ‘அத்திக்கடவு நாயகன்’ நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்: முதல்வரிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தினா். இது தொடா்பாக கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி... மேலும் பார்க்க