அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
30% குட்டைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி நீா் வரவில்லை: அண்ணாமலை
30 சதவீத குட்டைகளுக்கு தற்போதுவரை அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீா் வரவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
‘அத்திக்கடவு நாயகன்’ நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்றாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேற பாடுபட்டவா்கள் குறித்து இந்த நூலில் படங்களுடன் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அடுத்த நிதிநிலை அறிக்கை அனைத்து விவசாயிகளையும் ஊக்குவிப்பதாக இருக்கும்.
30 சதவீத குட்டைகளுக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீா் செல்லவில்லை. இதற்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தீா்வு காண வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.