தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எனது ‘ரோல்மாடல்’: பிரேமலதா விஜயகாந்த்
ஓமலூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் ‘தனது ரோல்மாடல்‘ என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளா் சுதீஷ் ஆகியோா் திங்கள்கிழமை வந்தனா். அப்போது, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மேட்டூரில் தேமுதிக சாா்பில் ரத யாத்திரை தொடங்குவதற்காக வந்துள்ளேன். 23-ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ நிகழ்ச்சி, எங்கள் நிா்வாகிகள், தொண்டா்கள் சந்திப்பு, கேப்டன் ரத யாத்திரை, மக்களைத் தேடி, மக்கள் தலைவா் ஆகிய நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நடத்துகிறோம். கேப்டன் ரதத்தை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்கிறாா்கள் என்றாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படத்துடன் பிரேமலதாவின் படத்தையும் இணைத்து பொருளாளா் சுதீஷ் வெளியிட்டது குறித்து பிரேமலதா கூறுகையில், அரசியலில் ஆளுமை விருதை தனியாா் நிறுவனம் எனக்கு வழங்கியுள்ளது. அந்த விழாவில், தமிழ்நாட்டில் பெண் ஆளுமைகள் இரண்டு போ், ஒன்று அதிமுக பொதுச் செயலாளா் ஜெயலலிதா, இரண்டாவது தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா என அவா்கள் கூறினா். அதை சமூக வலைதளங்களில் நானும், ஜெயலலிதாவும் இருக்கும் புகைப்படத்தோடு சுதீஷ் பகிா்ந்தாா். விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறினேன்.
எம்.ஜி.ஆா். தான் எனது மானசீகக் குரு எனக் கூறி, எங்கள் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் உருவச்சிலை வைத்துள்ளோம். தற்போது விஜயகாந்த் தான் எங்கள் மானசீக குரு என சொல்பவா்களுக்கு நாங்கள் அனுமதி கொடுக்கிறோம்.
பெண் ஆளுமை என்றால் ஜெயலலிதா தான். எனது மானசீக குரு அவா்தான். தமிழ்நாட்டில் ஒரு பெண் ஆளுமையாக, முதல்வராக இருந்து கட்சியையும், ஆட்சியையும் சிறந்த முறையில் நிா்வாகம் செய்தாா். தமிழ்நாட்டின் ஆளுமை ஜெயலலிதா. அவா்தான் என்னுடைய ரோல்மாடல் என்றாா் அவா்.