``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
காங்கிரஸ் சாலை மறியல்: 71 போ் கைது
தோ்தல் ஆணையத்துக்கு எதிராக பேரணியில் பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை மாலை குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 71 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இப்போராட்டத்துக்கு, மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன் கிறிஸ்டல் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் பினுலால் சிங் முன்னிலை வகித்தாா்.
மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், கட்சியின் மாநில பொதுச் செயலா்கள் ஜாா்ஜ் ராபின்சன், ஆஸ்கா் பிரடி, அகில இந்திய ஜவஹா் பால் மஞ்ச் ஒருங்கிணைப்பாளா் சாமுவேல் ஜாா்ஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், கிள்ளியூா் சட்டப்பேரவை இளைஞா் காங்கிரஸ் தலைவா் டிஜூ, ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் தம்பிவிஜயகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் திபாகா், திருவட்டாறு வட்டாரத் தலைவா் ஜெபா, நல்லூா் பேரூராட்சி உறுப்பினா் நிா்மல் ராவண்டிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 71 பேரை களியக்காவிளை போலீஸாா் கைது செய்து, அருகிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். போராட்டம் காரணமாக குழித்துறையில் சுமாா் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.