இந்த வார ராசிபலன் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17 வரை #VikatanPhotoCards
சுதந்திர நாள் விடுமுறை: கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
சுதந்திர நாளையொட்டி தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
ஆக. 15 முதல் சுதந்திர நாள் மற்றும் அதற்கு அடுத்த இரு நாள்களும் வார இறுதி நாள் என்பதால், 17ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக உள்ளதால், தினசரி பேருந்துகளுடன் சேர்த்து கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆக. 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) 100 பேருந்துகளும் ஆக. 15 ஆம் தேதி வெள்ளிக் கிழமை 90 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
மாதாவரத்திலிருந்து ஆக. 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருத்தும் ஆக. 17 (ஞாயிற்றுக்கிழமை) 715 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு தவெக துணை நிற்கும்!