செய்திகள் :

"அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்"-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

post image

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

சேகர் பாபு
சேகர் பாபு

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

இந்தச் சூழலில் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீமான், கி.விரமணி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக போராட்டக்காரர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய தவெக விஜய் எந்தவொரு உதவியும், முழு ஆதரவும் தருவதாகக் கூறியிருக்கிறார்.

எஸ்.பி.வேலுமணி

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். அதிமுக ஆட்சியில் 17,000 தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தூய்மைப்பணியாளர் போராட்ட விவகாரத்தில் அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவில்லை; பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்" என்று உறுதியளத்துப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

தெருநாய்க்கடி: "போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?"- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து... மேலும் பார்க்க

பெங்களூரு: முடிவுக்கு வந்த நீண்டநாள் காத்திருப்பு; மெட்ரோ மஞ்சள் பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர்!

பெங்களூருவின் போக்குவரத்து வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு முக்கிய நாள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மஞ்சள் மெட்ரோ லைன்’ நேற்று (ஆகஸ்ட் 10, 2025) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த... மேலும் பார்க்க

`2026 தேர்தல்... மேற்கு மண்டலத்தில்தான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கும்' - முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பேசுகையில... மேலும் பார்க்க

Today Roundup: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் டு மோடியின் தொழில்நுட்ப புரட்சி வரை| 10.8.2025

இன்றைய நாளின் (ஆகஸ்ட் 10) முக்கியச் செய்திகள்!*பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் போராடி வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் ப... மேலும் பார்க்க

``Zero Defect, Zero Effect; தொழில்நுட்பத்தில் புரட்சி செய்ய இதுவே சரியான நேரம்'' - பிரதமர் மோடி

பெங்களூரு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பான மஞ்சள் வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ ரயிலைக் கொடி அசை... மேலும் பார்க்க

PMK: ``தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது'' - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லாமலேயே அன்புமணி தலைமையில் முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து இன்று இரவுபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில... மேலும் பார்க்க