Coolie: "முதலில் நான் ஓகே சொல்லவில்லை; லோகேஷ் கனகராஜ்தான்.." - கூலி குறித்து நாக...
அடுத்த 2 மணிநேரம் சென்னை, 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதல் சில பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், பகல் 1 மணிவரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல், அரியலூர், பெரம்பலூர், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.