செய்திகள் :

``வயது முதிர்வால் அல்ல; துறை உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்'' - TVK ஆனந்த்

post image

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி மேடையில் பேசிய பொதுச் செயலாளர் ஆனந்த் கூறும்போது, "தங்களை நேரடியாக அழைப்பதற்காக தான் இந்த கூட்டம். நேரம் இருந்திருந்தால் தங்களின் வீட்டிற்கு வந்து அழைத்திருப்பேன். தவெக தலைவர் விஜய் அறிவித்ததே போதும், என குடும்பத்துடன் வரும் கட்சிதான் தவெக. அன்பால் சேர்ந்த கூட்டம். காசு பணத்தால் சேர்ந்த கூட்டம் கிடையாது. உணர்வுடன் சேர்ந்த கூட்டம் தவெக உயிர் மூச்சு விஜய் தான்.

திண்டுக்கல்லில் நடந்த இரண்டாவது மாநில மாநாடு பொதுகூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்

விக்கரவாண்டி தவெக வெற்றி மாநாட்டில் வாகனங்கள் எண், இன்சூரன்ஸ், டிரைவர் பெயர், லைசென்ஸ் என அனைத்துயும் பதிவு செய்து மாநாடு நடத்தும் ஒரே கட்சி தவெக மட்டும்தான்.

உண்மையான சகோதர்கள் உள்ள கட்சி. 2-வது மாநாட்டிற்கு பஸ், வேன், கார் கிடைக்காவிட்டாலும் வெற்றி மாநாடு சிறப்பாக நடைபெறும். நமது தலைவர் விஜய் காசு பணம் கொடுக்க வேண்டியது இல்லை. அவரிடம் நல்ல மனசு இருக்கிறது.

விஜய்
விஜய்

வயது முதிர்வின் காரணமாக அரசியலுக்கு வரவில்லை. துறையின் உச்சத்தில் இருந்து தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.

2026-ல் திண்டுக்கல்லில் 7 தொகுதி த.வெ.க வெற்றி பெறும். இன்று நேற்று மக்கள் சேவை செய்ய ஆரம்பிக்கவில்லை கடந்த 32 வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விஜய் கட்சி ஆரம்பிப்பார் என்று தெரியாமலேயே மக்களுக்கு உதவி செய்த ஒரே இயக்கம் நமது இயக்கம் தான். 2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்." என தெரிவித்தார்.

``ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? நான் FIR பதிவு செய்வது அழகல்ல'' - எம்.பி கபில் சிபல்

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் பதவி விலகலுக்கு பின்னர் அவரது இருப்பிடம் குறித்து எம்.பி. கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ’... மேலும் பார்க்க

``வ.உ.சி-யின் சுதேசி கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி'' - எல்.முருகன்

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ம் தேதியன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பா‌.ஜ.க சார்பில் நாடு முழுவதும் 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

Moringa Leaves: தலைமுடி உதிர்தல் முதல் மூட்டுவலி வரை சரியாக்கும் முருங்கைக்கீரை!

சிக்குரு, கிரஞ்சம், கிழவீ, சோபாஞ்சனம் எனப் பல பெயர்களைக் கொண்ட முருங்கை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லலாம். இதன் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் கு... மேலும் பார்க்க

``திராவிட மாடல் 2.0; நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்'' - மு.க.ஸ்டாலின்

தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பட்டா வழங்கும் விழாவில்... மேலும் பார்க்க

``சாலை ஓரத்தில் அல்ல; பட்டா நிலத்தில் மட்டுமே கட்சி கொடி கம்பங்கள்'' - குமரியை பின்பற்றுமா தமிழகம்?

தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், சாதி கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகிவிடுமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு கடந்த 2-3 வாரங்களாகவே சரியான தூக்கமில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள்தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைக் கேள்விப்ப... மேலும் பார்க்க