எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பதா?: திருமாவளவனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
``வ.உ.சி-யின் சுதேசி கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி'' - எல்.முருகன்
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ம் தேதியன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் நாடு முழுவதும் 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்ற இந்த யாத்திரையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ஏ.டி.சி வரை தேசிய கொடிகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
ஏ.டி.சி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய எல். முருகன், "பாரத பிரதமர் மோடியின் பொற்கால ஆட்சியில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலைய விரிவாக்கங்கள் நடைபெற்று வருகின்றன. செய்தித்தாள்களிலும் சினிமாவிலும் நாம் பார்த்து வந்த புல்லட் ட்ரெயின் இன்றைக்கு நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றால், அதற்கு நம்முடைய பிரதமர் தான் காரணம். உள்நாட்டு தயாரிப்புகளை அதிகப்படுத்தி சுயசார்பு பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஐயா வ.உ.சி அவர்களின் கனவாக இருந்தது.

அந்த சுதேசி கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி அவர்கள். அதற்கு ஒரே எடுத்துகாட்டாக இருக்கிறது ஆப்ரேஷன் சிந்தூர். உள்நாட்டு ராணுவ தயாரிப்புகள் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உரிய பாடம் புகட்டப்பட்டது. நாட்டின் 100 - வது சுதந்திர தினம் கொண்டாடும் போது உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக நம் நாடு இருக்கும் " என்றார்.