அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!
ஒன்றாக இணைந்த குடும்பம்...பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டப் பெண், சுயமாக முன்னேறி, எப்படி குடும்பத்தைக் கவனிக்கிறாள் என்பதை கருவாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், கடந்த வெள்ளிக்கிழமை(ஆக. 8) நிறைவடைந்தது.
கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவர் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைகிறார், கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவை, பாக்கியலட்சுமி ஏற்றுக்கொண்டு குடும்பம் ஒன்றாக இணைகிறது. இத்துடன் இனியா - ஆகாஷ் திருமணம் நடக்கிறது.
இவ்வாறாக பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ் ஆனது பல்வேறு திருப்புமுனைக் காட்சிகளுடன் நிறைவடைந்துள்ளது.
இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும், இந்தத் தொடரில் நடிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும், சக நடிகர்களுடான நட்பினையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பலருக்கு சற்று சோகத்தையே ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வந்த இரவு 7 மணிக்கு, திங்கள்கிழமைமுதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!