ரஜினியின் முதல் திரைப்படம் - 50வது ஆண்டு கூலி வரை வெளியிடும் ஒரே திரையரங்கம்!
வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்
வாரணாசியில் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தலைமை அர்ச்சகர் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
ஆண்டுதோறும் சவான் மாத பௌர்ணமி நாளில், வாரணாசியில் உள்ள ஆத்ம விஸ்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த வருடம், அமர்நாத் கோயிலை அடையாளப்படுத்தும் வகையில் கோயில் பருத்தியால் அலங்கரிக்கப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 8:00 மணியளவில் கருவறைக்குள் ஆரத்தியின் போது, பருத்தியில் தீப்பிடித்து அது விரைவாக பரவியது. தீ விபத்து ஏற்பட்டபோது சுமார் 30 பக்தர்கள் அங்கு இருந்தனர். அவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் கோயிலின் தலைமை அர்ச்சகர் உள்பட ஏழு பேர் காயமடைந்தனர்.
நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
உள்ளூர்வாசிகள் தண்ணீரை ஊற்றி எரியும் பருத்தியை அணைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் ஆரம்பத்தில் வாரணாசியில் உள்ள கபீர் சௌராஹா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், ஏழு பேரும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சுமார் 65 சதவீத தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.