செய்திகள் :

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

post image

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை வெளியிட என்பது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஒரு மாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.

இதையடுத்து, ஆக.1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பிகாரில் 7.24 கோடி வாக்காளா்கள் இருப்பதாக குறிப்பிட்ட தோ்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வழங்கப்பட்ட படிவங்களை முறையாக பூா்த்தி செய்யவில்லை எனக்கூறி 65 லட்சம் வாக்காளா்களின் பெயரை நீக்கியதாக தெரிவித்தது.

மேலும், இந்த வரைவு வாக்காளர் பட்டியல் நகலை பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கியது. இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்/சோ்ப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை செப்.1-ஆம் தேதிக்குள் வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் சமர்ப்பிக்கலாம் எனவும் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து, செப்.30-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த மனுக்களை கடந்த ஜூலை 29-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அரசமைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ எனத் தெரிவித்தது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஆக.12, 13 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதனிடையே வரைவு வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் தகவல்களை தோ்தல் ஆணையம் வெளியிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்) உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான், கோட்டீஸ்வர் சிங் ஆகியோா் அடங்கிய நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை விசாரித்தது. ஏடிஆர் சாா்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களின் தகவல்களை வருகின்ற ஆக.9-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் என்னென்ன தகவல்கள் சோ்க்கப்பட்டுள்ளது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நேற்று(ஆக. 9) உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரதாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

அதில், 65 லட்சம் வாக்காளர்களின் விவரத்தை யாரும் கேட்கவில்லை என்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் நீக்கிய காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்ற விதியில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜக்தீஷ்பூர் பகுதியில் ஃபசன்கஞ்ச் கச்னாவ் கிராமத்தில் வசிப்பவர் அன்சார் அகமத... மேலும் பார்க்க

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை: பிரதமர் தொடக்கி வைத்தார்!

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்களூர் - பெலகாவி, அமி... மேலும் பார்க்க

உ.பி.: கணவருடனான பிரச்னையால் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த மனைவி

உ.பி.யில் கணவருடனான பிரச்னையால் தனது 3 குழந்தைகளையும் உடலில் சேர்த்து கட்டிக்கொண்டு கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மா... மேலும் பார்க்க

வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

வாரணாசியில் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தலைமை அர்ச்சகர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். ஆண்டுதோறும் சவான் மாத பௌர்ணமி நாளில், வாரணாசியில் உள்ள ஆத்ம விஸ்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் சிறப்பாக அலங்கரிக... மேலும் பார்க்க

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் டூல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குல்காம் மாவட்டத்தின் அகல... மேலும் பார்க்க