விஜய் டிவியில் ஆக. 11 முதல் புதிய நேரத்தில் தொடர்கள்!
பாக்கியலட்சுமி, தங்கமகள் ஆகிய இரு தொடர்கள் நிறைவடைந்ததால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது. அதேபோல யுவன் மயில்சாமி நடிந்து வந்த தங்கமகள் தொடரும் இன்று(ஆக. 10) நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகும் இரவு 7 மணிக்கு, ஆக. 11( நாளை) முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், ஆக. 11 முதல் இரவு 7.30 மணிமுதல் 8.15 மணிவரை ஒளிபரப்பாகும் என்றும் அய்யனார் துணை தொடர் இரவு 8.15 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளே என் மருமகளே தொடர் ஆகஸ்ட் 11( நாளை) முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
தனம் தொடர் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், ஆகஸ்ட் 11( நாளை) முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒன்றாக இணைந்த குடும்பம்...பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவு!