செய்திகள் :

டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி

post image

டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில நாள்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக சில ‘ஆதாரங்களையும்’ வெளியிட்டாா்.

அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், “வாக்குகள் திருடப்படுவது என்பது ‘ஒரு நபர் - ஒரு வாக்கு’ என்ற அடிப்படை கருத்தியலுக்கு எதிரானது.

சுதந்திரமான மற்றும் நியாமான தேர்தலுக்கு, நேர்மையான வாக்காளர் பட்டியல் அவசியமானது. தேர்தல் ஆணையத்திடம் தெளிவான கோரிக்கையை வைத்துள்ளோம், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய டிஜிட்டர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டால், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சரிபார்க்க இயலும்.

இந்தப் போராட்டம் நமது ஜனநாயகத்தைக் காப்பதற்காக மட்டுமே. எங்களுடன் சேர்ந்து கோரிக்கைக்கு ஆதரளிக்க http://votechori.in/ecdemand என்ற இணையதளத்தை அணுகலாம், 9650003420 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை(ஆக.11) பேரணி

Lok Sabha Opposition Leader and Congress MP Rahul Gandhi has requested the Election Commission to release a digital voter list.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச... மேலும் பார்க்க

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

சத்தீஸ்கரில் புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. பெங்களூரூ கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஜத் படிதார். இவர் தனது மொபைல் எ... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாத வல்லரசாக இந்தியா மாறும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தில் ரைசன் என்ற பகுதியில் ரயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு வி... மேலும் பார்க்க

நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஃபட்னவீஸ் நன்றி

நாக்பூர்-புணே இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,... மேலும் பார்க்க

தில்லியில் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை(ஆக.11) பேரணி

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாளை (ஆகஸ்ட் 11) தில்லியில் பேரணி நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ஒர... மேலும் பார்க்க

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி!

அமேதியில் குடும்பத் தகராறில் கணவரின் பிறப்புறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், ஜக்தீஷ்பூர் பகுதியில் ஃபசன்கஞ்ச் கச்னாவ் கிராமத்தில் வசிப்பவர் அன்சார் அகமத... மேலும் பார்க்க