இயக்குநராகும் கென் கருணாஸ்!
நடிகர் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ். இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.
அப்படத்தைத் தொடர்ந்து விடுதலை - 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, தனுஷின் திருச்சிற்றம்பம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
இந்த நிலையில், கென் கருணாஸ் இயக்குநராக புதிய திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை அவரின் தந்தையும் நடிகருமான கருணாஸ் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: சம்பளத்தை உயர்த்திய சூரி?