பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
Sanju Samson: 'அவரின் படத்தைப் பார்க்க ரிஸ்க் எடுத்தேன்'- ரஜினி குறித்து நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் தன்னுடைய கிரிக்கெட் பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் ரஜினி குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.
"நான் ரஜினி சாரின் தீவிர ரசிகர். ஒருமுறை அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது டப்ளினில் அன்றைக்கு மறுநாள் போட்டி நடக்கவிருந்தது, நான் போட்டிக்காக தயாராக வேண்டும்.

ஆனால் நாளை ரஜினி சாரின் படம் ரிலீஸாகவிருந்தது. நான் தனியாக வெளியே சென்று, தியேட்டரை தேடிக்கண்டுபிடித்து, டிக்கெட் எடுத்து, தனியாக ரஜினி படம் பார்த்துவிட்டு வந்தேன். இவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளேன் அந்த அளவுக்கு நான் ரஜினியின் தீவிர ரசிகர்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...