டிம் டேவிட், ஹேசில்வுட் அசத்தல்: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!
மோசமான நாள்களை கடந்தது எப்படி? நந்திதா ஸ்வேதா பதில்!
நடிகை நந்திதா ஸ்வேதா தனது மோசமான நாள்களை எப்படி கடந்தேன் எனக் கூறியுள்ளார்.
கன்னடத்தைச் சேர்ந்த நடிகை நந்திதா ஸ்வேதா (35 வயது) தமிழில் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக ரத்தம், ரணம் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாவில் பதிலளித்துள்ளார். அதில், உங்களது மோசமான நாள்களை எப்படி எதிர்கொண்டீர்கள் எனக் கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு நந்திதா கூறியதாவது:
அனைவருக்குமே இந்த நிலைமைவரும் சரிதானே. நான் வெறுமனே இவையனைத்தும் நல்லது என்கிறேன்.
இந்த மாதிரி நேரங்களில் நான் எனது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, படுக்கையில் படுத்துக்கொண்டே இருப்பேன். நான் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிடுவேன். அடுத்த நாளை நேர்மறையாகத் தொடங்குவேன் என்றார்.
தற்போது, கன்னடத்தில் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.