செய்திகள் :

``திராவிட மாடல் 2.0; நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்'' - மு.க.ஸ்டாலின்

post image

தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

பட்டா வழங்கும் விழாவில் ஸ்டாலின், "நேற்று தமிழ்நாட்டோட கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகிற மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டேன்.

இன்று மருத்துவமனை ஒன்றைத் திறந்துவைத்தேன். கல்வியும், மருத்துவமும் தான் திராவிட மாடலின் இரு கண்கள் என்று நான் அடிக்கடி கூறுவேன். அதற்கான எடுத்துக்காட்டு தான் இந்த இரு நாள்களின் நிகழ்ச்சிகள்.

ஸ்டாலின் | தாம்பர மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

நிலம்தான் அதிகாரம்!

பொதுவாக, ஒரு அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், நான் கேட்கும் முதல் கேள்வி, 'இன்று எவ்வளவு பட்டாக்களை வழங்கப்போகிறோம்" என்பது தான்.

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை - உண்ண உணவு, உடுத்த ஆடை, இருக்க இடம். இதில் உணவும், ஆடையும் எளிதாக கிடைக்கலாம். ஆனால், இருக்க நிலம் எளிதாக கிடைத்துவிடாது.

ஏனெனில், நிலம் தான் அதிகாரம். காலுக்கு கீழே நிலமும், தலைக்கு மேலே கூரையும் இன்னும் பலரின் கனவு. அதனால் தான், பட்டா வழங்குவதில் நான் தனி கவனம் செலுத்துவேன்.

ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமூதாயத்தைக் கட்டமைக்க, ஏழை, எளிய மக்களை மேம்படுத்த, பெண்களை முன்னிலைப்படுத்தியும் இந்த அரசு இலவச பட்டா வழங்கி வருகிறது.

வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு

தென்குமரியில் இருந்து சென்னை வரை சீரான வளர்ச்சி இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து நாங்கள் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்... தொழில்நிறுவனங்களைக் கொண்டுவருகிறோம்... வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம்.

இதனால் தான், திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு 11.19 விழுக்காடு பெற்று பொருளாதார வளர்ச்சியோடு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.

14 ஆண்டுகளுக்கு முன்பு, கலைஞர் ஆட்சிக்கு பிறகு தமிழ்நாடு இப்போது தான் இரண்டு இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லை. ஏன், நாட்டிலேயே இல்லை. இது தான் திமுகவின் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி.

2011 - 2021-ம் ஆண்டுகளில் பின்னோக்கி சென்ற தமிழ்நாட்டை மீட்டெடுத்து உள்ளோம். வளர்ச்சியின் உச்சப்பாதைக்கு கொண்டு சேர்த்திருக்கிறோம்.

பட்டா வழங்குதல் விழாவில் ஸ்டாலின்
பட்டா வழங்குதல் விழாவில் ஸ்டாலின்

பழனிசாமியின் வயிற்றெரிச்சல்

இதைப் பொறுத்தகொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமியின் நண்பர் ஒன்றிய அரசு கொடுத்த புள்ளிவிவரத்தையே தவறு என்று இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்.

பொருளாதார அளவுகோல் தான் வளர்ச்சியின் அளவுகோல். இந்த அடிப்படையைக் கூட தெரியாத அறிவுஜீவியைப் போல அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.

இந்திய அளவில், பிரதமர் மோடி, மற்ற முதலமைச்சர்கள் சாதிக்கமுடியாததை நாம் சாதித்துகொண்டிருப்பது தான் அவருடைய வயிற்றெரிச்சல்.

திராவிட மாடல் 2.0-வில் இன்னும் அதிகமான வளர்ச்சியை ஏற்படுத்துவோம். இந்திய நாடே தமிழ்நாட்டை திரும்பி பார்க்கும் அளவிற்கு நிச்சயம் செயல்படுவோம். அதை நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பார்த்துகொண்டிருப்பீர்கள்.

``சாலை ஓரத்தில் அல்ல; பட்டா நிலத்தில் மட்டுமே கட்சி கொடி கம்பங்கள்'' - குமரியை பின்பற்றுமா தமிழகம்?

தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், சாதி கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகிவிடுமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு கடந்த 2-3 வாரங்களாகவே சரியான தூக்கமில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள்தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைக் கேள்விப்ப... மேலும் பார்க்க

Sugar Detox: யார், எப்படி செய்யலாம்? நன்மைகள் என்ன? டயபடீஸ் இருப்பவர்களும் செய்யலாமா?

முன்பெல்லாம் சர்க்கரை நோயாளிகள்தான் ‘சர்க்கரையில்லா’ வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இன்றைக்கு `டயட்’ என்ற பெயரில் சாதாரணர்களும் சர்க்கரையை ஒதுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், `வெள்ளை உணவுகளைப் ... மேலும் பார்க்க

US tariffs: ``ஒரு அங்குலம் இடம் கொடுத்தால், ஒரு மைல் தூரம் செல்வான்'' - சீன தூதர் சு ஃபெய்ஹாங் பதிவு

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகளுக்காக இந்தியா மீது 50 சதவிகித வரியையும், அபராதத்தையும் விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ன பேசினார்? இப்படி ட்ரம்ப் வரிகளைக் காட்டி... மேலும் பார்க்க

US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என்ன பேசினார்கள்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியும், அபராதமும் விதித்துள்ளார். இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே - 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது' என்பது தான். அப்படி ரஷ்யா... மேலும் பார்க்க

`மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்' -போராடிய கவுன்சிலர்கள் அந்த நேரத்தில் எஸ்கேப்; காரணம் என்ன?

காரைக்குடி மாநகராட்சி திமுக மேயருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது, இந்த பிரச்னையை கிளப்பிய துணை மேயரே கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேயர் முத்துதுரைசிவகங... மேலும் பார்க்க