செய்திகள் :

``ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? நான் FIR பதிவு செய்வது அழகல்ல'' - எம்.பி கபில் சிபல்

post image

முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் பதவி விலகலுக்கு பின்னர் அவரது இருப்பிடம் குறித்து எம்.பி. கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ’லாபதா லேடீஸ்’ என்ற திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ‘லாபதா துணைக் குடியரசுத் தலைவர்’ என்று இதுவரை கேள்விப்படவில்லை” என்று எம்.பி. கபில் சிபல் குறிப்பிட்டிருக்கிறார்.

தன்கரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளைத் தணிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

”ஜூலை 22 அன்று, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பதவி விலகினார். இன்று ஆகஸ்ட் 9, அன்றிலிருந்து அவரது இருப்பிடம் எங்களுக்கு தெரியவில்லை. அவர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாளில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செயலாளர் தொலைபேசியில் அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார்” என்று சிபல் பி.டி.ஐ-க்கு தெரிவித்திருக்கிறார்.

சுயேச்சை எம்.பி.யான சிபல், "தனது அரசியல் தோழர்கள் பலரும் தன்கரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரின் இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

”அவர் எங்காவது சிகிச்சை பெறுகிறாரா? அவரது குடும்பத்தினரும் எதுவும் கூறவில்லை. இதுபோன்ற விஷயங்களை வேறு நாடுகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு, எனவே இதுபோன்ற தகவல்கள் பொதுவெளியில் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஜக்தீப் தன்கர்
ஜக்தீப் தன்கர்

"தன்கர் என்னுடன் வழக்கறிஞராக இருந்து பல வழக்குகளில் வாதிட்டவர். நான் சென்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வது அழகாக இருக்காது. அவரிடமிருந்து, அவரது நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்து எந்த செய்தியும் இல்லை..” எனவே உள்துறை அமைச்சகம் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரின் இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று சிபில் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 21 அன்று, பருவமழைக் கூட்டத்தொடரின் முதல் நாளில், தன்கர் திடீரென துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அளித்த பதவி விலகல் கடிதத்தில், உடல்நலக் காரணங்களால் உடனடியாக பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

``வயது முதிர்வால் அல்ல; துறை உச்சத்தில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்'' - TVK ஆனந்த்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க

``வ.உ.சி-யின் சுதேசி கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் மோடி'' - எல்.முருகன்

இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 -ம் தேதியன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வலியுறுத்தி பா‌.ஜ.க சார்பில் நாடு முழுவதும் 'ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

Moringa Leaves: தலைமுடி உதிர்தல் முதல் மூட்டுவலி வரை சரியாக்கும் முருங்கைக்கீரை!

சிக்குரு, கிரஞ்சம், கிழவீ, சோபாஞ்சனம் எனப் பல பெயர்களைக் கொண்ட முருங்கை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று சொல்லலாம். இதன் இலை (கீரை), காம்பு, பூ, காய், பிசின், பட்டை என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் கு... மேலும் பார்க்க

``திராவிட மாடல் 2.0; நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்'' - மு.க.ஸ்டாலின்

தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பட்டா வழங்கும் விழாவில்... மேலும் பார்க்க

``சாலை ஓரத்தில் அல்ல; பட்டா நிலத்தில் மட்டுமே கட்சி கொடி கம்பங்கள்'' - குமரியை பின்பற்றுமா தமிழகம்?

தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள், சாதி கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென ஆரம்பித்திருக்கும் தூக்கமின்மை பிரச்னை; தொடருமா, சரியாகிவிடுமா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு கடந்த 2-3 வாரங்களாகவே சரியான தூக்கமில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள்தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். இன்று பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைக் கேள்விப்ப... மேலும் பார்க்க