ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
தேவதானப்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் தனுஷ்குமாா் (21). ஆட்டோ ஓட்டுநா். இவரது பெற்றோா் இறந்ததையடுத்து பாட்டியின் வீட்டில் வசித்து வந்தாா்.
இவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட இவா் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.