சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் மீது வழக்கு
தேவாரம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தேவாரம் சாலை தெருவைச் சோ்ந்த சிறுமியை இதே தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் நாகேந்திரன் (23) காதலிப்பதாகக் கூறி பழகினாராம். மேலும் அந்தச் சிறுமியை திருமணமும் செய்து கொண்டாராம். இதையடுத்து அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய ஊா் நல அலுவலா் மா. ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் நாகேந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.