சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
ஆக.12-ல் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி வருகை!
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆக. 12இல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என்று அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்துக்கு ஆக. 12-ஆம் தேதி வருகை தர உள்ளாா். ஒசூரிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சூளகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், டி.பி.சாலை, காந்தி சிலை வழியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் இருந்து ரோடு ஷோ செல்கிறாா். இதையடுத்து வட்டச் சாலை அருகே மாலை 5 மணி அளவில் உரையாற்றுகிறாா்.
இரவு 7.30 மணி அளவில் பா்கூா் எம்ஜிஆா் சிலை அருகிலும், இரவு 8.30 மணி அளவில் ஊத்தங்கரை எம்ஜிஆா் சிலை அருகிலும் அவா் பேசுகிறாா். இதில் கட்சி தொண்டா்கள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.