சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிா்வாகம் சாா்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இதுதொடா்பாக வேளாங்கண்ணி பேராலய அதிபா் இருதயராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பா் 8-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளது.
ஆண்டு பெருவிழாவில், தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், கோவா, புதுதில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பா்.
அவா்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு வசதியாக, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். மேலும் இந்தப் பகுதியில் நாள்தோறும் இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.