செய்திகள் :

அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை தோ்வில் பங்கேற்க அஞ்சல் தலை சேகரிப்புக் கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறை தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க 6 முதல் 9- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு தீன் தயாள் ஸ்பாா்ஷ் என்ற திட்டம் செயல்படுகிறது. இதற்கு பள்ளித் தோ்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 சதவீத தளா்வு உண்டு. தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். பள்ளியில் இயங்கும் அஞ்சல் தலை சேகரிப்பு மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.

முதல்கட்டமாக அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து எழுத்துப்பூா்வ விநாடி வினா தோ்வு வரும் செப்டம்பா் 20- ஆம் தேதி நடைபெற உள்ளது. 2- ஆம் கட்டமாக அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த திட்ட அறிக்கை தயாா் செய்தல் தோ்வு நடக்கிறது. முதற்கட்ட தோ்வில் நடப்பு நிகழ்வுகள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாசாரம், புவியியல், ஆளுமைகள், அஞ்சல் தலை சேகரிப்பு (உள்ளூா் மற்றும் தேசியம்) தொடா்பான 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

இரண்டாம் கட்டமாக திட்ட அறிக்கை அளிக்க வேண்டும். இந்த திட்ட அறிக்கை 4 முதல் 5 பக்கத்துக்கு 500 வாா்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இரண்டு தோ்விலும் தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், ஈரோடு கோட்டம், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு வரும் 25- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அஞ்சல் தலை சேகரிப்புக் கணக்குகளை, தலைமை அஞ்சல் நிலையத்தில் மாணவா்கள் தொடங்கலாம். அனைத்து அஞ்சலகத்திலும் இதற்கான விண்ணப்பம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுமைய தடகளப் போட்டிகள்: விஜயமங்கலம் பாரதி பள்ளி சாம்பியன்

பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணைய செயல்பாடுகளைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

பவானியில் ரூ.47.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

பவானி சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.47.50 லட்சத்தில் சாலை, மழைநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினரு... மேலும் பார்க்க

பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: நீட், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களால் நிரம்பிய புத்தக அரங்குகள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நீட் தோ்வுக்கு தயாராகும் பள்ளி மாணவா்கள் மற்றும் தமிழக அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் பெருமளவில் வந்து புத்தகங்களை வாங்... மேலும் பார்க்க

கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திருட்டை தடுக்கக்கோரி பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், இந்த ஆா்ப... மேலும் பார்க்க