பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.சாந்தகுமாா், பெருந்துறை வட்டாட்சியா் ஜெகநாதன், சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.