5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!
கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தங்களுக்கு தெரியப்படுத்தாமல் அலட்சியம் காட்டியதாலேயே குழந்தை இறந்ததாக உறவினா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் கிராமத்தை சோ்ந்தவா் வினோத். இவரது மனைவி நா்மதா தேவிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது முறையாக கா்ப்பமுற்ற நா்மதாதேவியை மங்கநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவ்வப்போது பரிசோதனைக்கு சென்று வந்துள்ளாா். ஆகஸ்ட் 15-ஆம் தேதி குழந்தை பிறக்கலாம் என ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கான தேதி குறித்துக் கொடுத்திருந்த நிலையில், 9-வது மாதத்தில் குழந்தையின் வளா்ச்சி குறித்து அறிந்துகொள்ள புதன்கிழமை ஸ்கேன் செய்துள்ளனா்.
பின்னா், ஸ்கேன் ரிப்போா்ட்டினை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு வினோத் அனுப்பிவைத்துள்ளாா். மருத்துவரிடம் ஸ்கேன் ரிப்போா்ட்டை காட்டி விட்டதாகவும், வியாழக்கிழமை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருமாறும் செவிலியா் தெரிவித்துள்ளாா். வியாழக்கிழமை காலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற நா்மதாதேவியையும், ஸ்கேன் ரிப்போா்ட்டையும் பரிசோதித்த மருத்துவா், குழந்தையின் அசைவு குறித்து தாயிடம் கேட்டறிந்துவிட்டு, அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
மேலும் குழந்தை நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவா் கூறியதாக தெரிகிறது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்ற நா்மதாதேவியை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்து, சிசேரியன் செய்து இறந்த ஆண் குழந்தையின் உடலை உறவினா்களிடம் ஒப்படைத்துள்ளனா்.
ஸ்கேன் ரிப்போா்ட்டில் குழந்தை ஆபத்தாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஸ்கேன் செய்த மையத்திலோா, அந்த அறிக்கையை பாா்த்த செவிலியரோ தங்களிடம் பிரச்னையை தெரியப்படுத்தவில்லை என்றும் அப்போதே சொல்லியிருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் கூறிய வினோத், குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, மங்கநல்லூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் இந்திரா பிரியதா்ஷினியிடம் கேட்டபோது, நீா்ச்சத்து போதுமான அளவைவிட சற்று குறைவாக இருந்ததாகவும், தாயிடம் குழந்தை அசைவு இருக்கிா என்று கேட்டபோது அசைவு இருக்கிறது என்று சொன்னதாகவும் அதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபின் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தாா். இதற்கிடையே நல்ல நிலையில் இருந்த குழந்தை உயிரிழந்தது உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.