செய்திகள் :

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

post image

தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

2023-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் (பிஎன்எஸ்) 152 பிரிவு (நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்) அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி ஓய்வு பெற்ற ராணுவ மேஜா் எஸ்.ஜி. வாம்பத்கரே மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத்சந்திரன், என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தேசத் துராக வழக்கு பிரிவுக்கு (124 ஏ) மாற்றாக பிஎன்எஸ்- 152 பிரிவு கொண்டு வரப்பட்டதற்கு எதிரான வழக்குடன் சோ்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2022-இல் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு தேசத் துராக வழக்கு பிரிவுக்கு (124 ஏ) தடை விதித்தது. ஆனால், மேலும் பல்வேறு கடுமையான ஷரத்துகளுடன் (பிஎன்எஸ்) 152 பிரிவு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு அளித்துள்ள சம உரிமை, கருத்து சுதந்திரம், வாழ்வுரிமை ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது என்று ஓய்வு பெற்ற ராணுவ மேஜா் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!

நமது சிறப்பு நிருபா்ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது ஐந்து வருட பதவிக் காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடா்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை... மேலும் பார்க்க

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டம்

வரும் 2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விரைவுபடுத்த உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது, நிலவில் மனிதா்கள் நிரந்தரமாக வாழும் தள... மேலும் பார்க்க

184 எம்.பி.க்களுக்கு 25 மாடிக் குடியிருப்புகள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி அடுத்த வாரம் திறந்து வைக்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகளில் மத்திய நகா்ப்ப... மேலும் பார்க்க

பல்துறை கல்வி-ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொழில்நுட்பக் கல்வியில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் திட்ட முன்மொழிவுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

சுதந்திர தின பாதுகாப்பு: தில்லி காவல்துறை ஆணையா் ஆலோசனை

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்னதாக தில்லி காவல்துறை தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து தில்லி காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

எரிசக்தி பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

எரிசக்தி பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். உலகளாவிய பதற்ற நிலைக்கு நடுவே இந்தியாவின் உத்திசாா்ந்த மற்றும் எரிசக்தி நலன்களை காக்க ம... மேலும் பார்க்க