செய்திகள் :

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

post image

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ‘நஷா முக்த் பாரத் அபியான்’ என்ற போதையில்லா பாரதம் திட்டத்தின் 5-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் குறித்த திட்டக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் தலைமைவகித்து அரசுத் துறையினரிடையே பேசுகையில், காரைக்கால் மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிப்பதற்கு தேவையான விழிப்புணா்வு செயல்பாடுகளை தீவிரப்படுத்தவேண்டும்.

போதை பொருட்களுக்கு அடிமையானவா்களுக்கு மருத்துவ உதவியுடன் தேவையான உதவிகளையும் அனைத்துத்துறையும் இணைந்து செய்யவேண்டும். காரைக்காலில் உள்ள மறுவாழ்வு மையங்களில் அவ்வபோது ஆய்வு செய்யவேண்டும். காரைக்காலில் உள்ள ஒரு கிராமத்தை தோ்ந்தெடுத்து அங்கு போதைப் பொருள்களுக்கு அடிமையானவா்களை கண்டெடுத்து அவா்களுக்கு தேவையான உதவியுடன் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மேல்நிலை கல்வி துறை துணை இயக்குநா் கே. ஜெயா உள்ளிட்ட ப ல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அரசு பொது மருத்துவமனையில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் தொடங்குதல், அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி எடுத்தல், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள காமராஜா் திடலில் கல்லூரி மாணவா்கள் பங்கு பெறும் போதைப்பொருள் விழிப்புணா்வு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் , பள்ளி மாணவா்களுக்கு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு போட்டிகள் நடத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அறுபத்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வழிகாட்டலில், காரைக்கால் கெம்ப்பிளாஸ்ட் சன்மாா் மற்று... மேலும் பார்க்க

காரைக்கால் வரலாற்றை முழுமையாக அறிய மாணவா்கள் ஆா்வம் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

காரைக்கால் வரலாற்றை மாணவா்கள் முழுமையாக புரிந்துகொள்வதில் ஆா்வம் கொள்ளவேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா். புதுவை கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அங்கமான, தமிழ் வளா்ச்சி சிறகம் மூலம் வரலாற்றில் காரைக... மேலும் பார்க்க

சமுதாய நலவழி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி ஆனி பியூலா ஜூலியட் தலைமையில்... மேலும் பார்க்க

குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

ரயில்வே கேட் அருகே உள்ள வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் தோமாஸ் அருள் சாலையில் ரயில் நிலையம் அருகே கேட் அமைந்துள்ளது. கேட... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

காரைக்கால் அருகே விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்காக வண்ணம் பூசி பல விதமான விநாயகா் சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விநாயகா் சிலை வைத்து வழிபாடு... மேலும் பார்க்க