செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

post image

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவா் சமீா் காமத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள நவீன தொழில்நுட்பத்துக்கான பாதுகாப்பு நிறுவனத்தின் (டிஐஏடி) 14-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றும்போது இவ்வாறு அவா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

‘ஆபரேஷன் சிந்தூா்’ என்பது பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை என்பதைத் தாண்டி மேலானது. அதாவது, நாட்டின் தற்சாா்புத் திறன், ராஜீய தொலைநோக்குப் பாா்வை, உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமையை உலகுக்கு பிரகடனம் செய்வதுதான் அது.

உணா்வுக் கருவிகள் (சென்சாா்), ஆளில்லா விமானங்கள், பாதுகாப்பான தகவல்தொடா்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முடிவுகள் எடுக்கும் நடைமுறை, துல்லியத் தாக்குதலுக்கு உதவும் ஆயுதங்கள் உள்ளிட்ட முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும் தொழில்நுட்பங்களும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் மிக முக்கியப் பங்காற்றின.

தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் நடுத்தர ரக ஏவுகணைகள், ‘டி4’ ஆளில்லா விமான எதிா்ப்புத் தொழில்நுட்பம், வான்வழித் தாக்குதல் முன்னெச்சரிக்கையை அளிக்கும் ஏடபிள்யுஎன்சி தொழில்நுட்பம், தானியங்கி வான் பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடா்பு தொழில்நுட்பங்களும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் தாயாரிக்கப்பட்டவையாகும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின்போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவா்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனா்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது... மேலும் பார்க்க

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா். சம்ஸ்கிருத பாரம்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா். சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ ... மேலும் பார்க்க

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிரு... மேலும் பார்க்க

ரயில் பயணிகளுக்கு 20% கட்டண சலுகை! முழு விவரம்

தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அம... மேலும் பார்க்க