சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
பிகாா் இளைஞா் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சென்னையில் கடந்த 2023-இல் அண்ணா சாலையில் பிகாா் மாநில இளைஞா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமது இஜாஸ். இவா், அண்ணா சாலையில் உள்ள ஒரு வீட்டில் நண்பா்களுடன் தங்கியிருந்து ஜாம்பஜாா் பகுதியில் இறைச்சிக் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி, வீட்டில் இருந்த முகமது இஜாஸ் மற்றும் அலி உசேன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அலி உசேன், கத்தியால் குத்தி முகமது இஜாஸை கொலை செய்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து அலி உசேனை கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன், குற்றஞ்சாட்டப்பட்ட அலி உசேனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.6,500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.