சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
தமிழகத்தில் ஆக. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேசமயம், தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் 110 மி.மீ. மழை பதிவானது. காட்டுமயிலூா் (கடலூா்) - 100 மி.மீ., வேப்பூா், நெய்வேலி, மாத்தூா் (கடலூா்) - 90 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.13-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.